உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொதிக்கும் சாம்பார் பட்டு ஓட்டல் தொழிலாளி பலி

கொதிக்கும் சாம்பார் பட்டு ஓட்டல் தொழிலாளி பலி

போடி:தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 48. இவர் போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில் சப்ளையராக பணியாற்றினார். நான்கு நாட்களுக்கு முன் ஓட்டல் அடுப்பில் இருந்து சாம்பார் பாத்திரத்தை கீழே இறக்கி உள்ளார். பாத்திரம் கை தவறி கீழே விழுந்ததில் கொதிக்கும் சாம்பார் சுந்தரமூர்த்தியின் உடலில் முன் பகுதியில் கொட்டியது. இதில் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுந்தரமூர்த்தி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி