கனமழையால் வீடு இடிந்து சேதம்
போடி : போடி பகுதியில் மூன்று நாட்களாக மதியத்திற்கு மேல் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழையால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் நேற்று போடி புதுார் ரகமத்துல்லா தெருவில் ராஜேஸ்வரி வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்தது. வீட்டின் உள் பகுதியில் ராஜேஸ்வரி உறவினர் பவுன்தாய், ஜான்சி ராணி மூவரும் இருந்ததால் காயம் இன்றி உயிர் தப்பினர்.