உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை தாக்கு: கணவர் கைது

மனைவியை தாக்கு: கணவர் கைது

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் முல்லைநகரைச் சேர்ந்தவர் மலைச்சாமி 27. இவரது மனைவி ஜீவராணி 25. இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். ஜீவராணி மருந்து கம்பெனி பிரதிநிதியாக பணி புரிந்து வந்தார். மலைச்சாமி அடிக்கடி ஜீவராணியை சந்தேகப்பட்டு வந்தார். அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். இந்நிலையில் அரிவாளுடன் வந்த மலைச்சாமி, ஜீவராணியிடம் யாருடன் அலைபேசியில் பேசினாய் என அவதூறாக பேசி, மிதித்து கொலை மிரட்டல் விடுத்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், மலைச்சாமியை கைது செய்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை