உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது

மனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது

போடி: போடி ஜீவா நகரை சேர்ந்தவர் சுமன் 32. இவரது மனைவி தனலட்சுமி 31. இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கோபித்து கொண்டு தனது தாயார் சித்ராவின் வீட்டிற்கு சென்று உள்ளார்.இந்நிலையில் தனலட்சுமி நேற்று காலை வருஷநாட்டை சேர்ந்த அஜித்குமாருடன் போடி ஜீவா நகர் பெட்ரோல் பங்க் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். டூவீலரில் வந்த சுமன் இவர்களை பார்த்ததும் தனலட்சுமியை அடித்து, கத்தியால் வயிற்றில் குத்தினார். காயம் அடைந்த தனலட்சுமி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.தனலட்சுமி தாயார் சித்ரா புகாரில் போடி டவுன் போலீசார் சுமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !