உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் 40, இவரது மனைவி ஜெகதீஸ்வரி 32, இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். ஜெகதீஸ்வரி கடமலைக்குண்டில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டதால் சில ஆண்டுகளாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு மாதமாக கணவனை பிரிந்த ஜெகதீஸ்வரி அவரது தந்தை வீட்டில் இருந்தார். அவ்வப்போது அங்கு சென்று அசோக்குமார் மனைவியை பார்த்து வருவார். நேற்று காலை ஜெகதீஸ்வரியை பார்க்க சென்ற அசோக்குமார் அவரை தன்னுடன் வீட்டிற்கு வர வற்புறுத்தியுள்ளார். ஜெகதீஸ்வரி மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அசோக்குமார் கத்தியால் ஜெகதீஸ்வரியின் பின் கழுத்தில் குத்தியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெகதீஸ்வரி புகாரில் அவரது கணவரை கண்டமனூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை