மேலும் செய்திகள்
டூவீலர் விபத்து பள்ளி மாணவர் பலி
26-Sep-2025
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 47. இவரது மனைவி முத்துலட்சுமி 38. இவர்களுக்கு 20 வயது மகன், 18 வயது மகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக ஜி.கல்லுப்பட்டியிலிருந்து, முத்துலட்சுமி பெற்றோர் ஊரான உத்தமாளையம் அருகே ஓடைப்பட்டிக்கு குடும்பத்துடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்றனர். அங்கு விபத்தில் சிக்கிய விஜயகுமாருக்கு வலது கால் பாதித்தது. தொடர் சிகிச்சையில் இருந்த போது விஜயகுமாருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ளவர்களிடம் தகராறு செய்து விட்டு மீண்டும் ஜி.கல்லுப்பட்டிக்கு விஜயகுமார் மட்டும் சென்றுள்ளார். அங்கு அவரை பல இடங்களில் தேடியும் ஓராண்டாக காணவில்லை. முத்துலட்சுமி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
26-Sep-2025