மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
23-Sep-2025
போடி : போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் பொற்கொடி 27. இவரது கணவர் முத்து அருண் பாலாஜி 28. இவர் கோடாங்கிபட்டி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பொற்கொடி வேலைக்கு சென்ற போது, முத்து அருண் பாலாஜி வீட்டில் இருந்து உள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவரை காணவில்லை. கடன் பிரச்சனையால் வீட்டை விட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பொற்கொடி புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன முத்து அருண் பாலாஜியை தேடுகின்றனர்.
23-Sep-2025