மேலும் செய்திகள்
ராகுலுக்கு கொலை மிரட்டல் போலீசில் காங்., புகார்
28-Sep-2024
கூடலுார்: கூடலுாரில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நெல் அறுவடை துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று நகராட்சி தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார்.தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, கொள்முதல் நிலைய எழுத்தர் அசோக்குமார், உதவியாளர் பாஸ்கரன், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது நெல்லை குவித்து வைத்திருந்தனர். மதியத்திற்கு மேல் கனமழை பெய்ததால் சிரமத்திற்கு உள்ளாகினர்.
28-Sep-2024