உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் சிறுவர்கள் மீதான அத்துமீறல் வழக்குகள் அதிகரிப்பு

இடுக்கியில் சிறுவர்கள் மீதான அத்துமீறல் வழக்குகள் அதிகரிப்பு

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் சிறுவர், சிறுமியர் மீதான அத்துமீறல்கள் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளன.மாவட்டத்தில் சிறுவர், சிறுமியர் மீதான அத்துமீறல்களை தடுப்பதற்கு குழந்தைகள் நல குழு, போலீஸ் ஆகியோர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. இருப்பிணும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.கடந்தாண்டு அக்டோபர் வரை மாவட்டத்தில் அத்துமீறல்கள் தொடர்பாக 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை தொடர்பாக 2, பாலியல் பலாத்காரம் 91, கடத்தல் 3, குழந்தை திருமணம் 1, பிற அத்துமீறல்கள் 100 என்ற எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.அதேசமயம் 2021ல் 125 வழக்குகள் பதிவான நிலையில் 2022ல் 267, 2023ல் 231 ஆக அதிகரித்தது. சிறுவர்களுக்கு எதிரான அத்துமீறல்களில் மிகவும் கூடுதலாக அவர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் ஆகியோர் மூலம் நடப்பதாகவும், அலைபேசி, சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் துஷ்பிரயோகம் அத்துமீறல்கள் நடக்க முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை