உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தீபாவளிக்கான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி அதிகரிப்பு: நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

தீபாவளிக்கான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி அதிகரிப்பு: நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி: தீபாவளி பண்டிகைக்கான டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் விற்பனை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் ஆர்வத்துடன் உற்பத்தி பணிகளை தொடர்கின்றனர்.ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி தறிகளில் 60, 80ம் நம்பர் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி ஆகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக வந்தும் கொள்முதல் செய்கின்றனர். 100க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக வியாபாரத்தை தொடர்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் ஒரு மாதத்திற்கு முன்பே சுறுசுறுப்பாக இருந்ததால் இருப்பில் இருந்த சேலைகள் விற்று விட்டன. தொடர்ந்து சேலைகளுக்கான தேவை இருப்பதால் தற்போதும் உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள் சுறுசுறுப்புடன் பணிகளை தொடர்கின்றனர். சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் எதிர்பார்த்ததை விட திருப்திகரமாக உள்ளது. தற்போது இப்பகுதியில் 60, 80ம் நம்பர் நைஸ் ரக நூல்களில் பல்வேறு வண்ணங்களில் சேலைகள் உற்பத்தியாகிறது. பிளைன், புட்டா, கோர்வை, கட்டம் மற்றும் பல்வேறு வகை பேடுகள் கொண்ட பார்டர்களுடன் உற்பத்தியாகும் சேலைகளுக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு உற்பத்தியாகும் சேலைகள் விலை ரூ.400 முதல் 1800 வரையிலான விலையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு வியாபாரம் தீபாவளி நாள் வரை தொடரும் வாய்ப்புள்ளதால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியாக உள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை