உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாட்டுப்பொங்கலுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

மாட்டுப்பொங்கலுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

தேனி : தேனி நகரில் பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்க தேவைப்படும் கயிறு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.தேனியில் தயாரிக்கப்படும் இப்பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தைத்திருநாளில் அலங்கார பொருட்களான மணி, 3 வகை மாடல்களில் பெல்ட் மணி, கழுத்து கயிறு, பிடி கயிறு செட் உள்ளிட்டவை விற்பனை தேனி நகரில் சூடுபிடித்துள்ளது.தேனி வியாபாரி பாலமுருகன் கூறுகையில், 'கால்நடைகள் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்குகிறோம். அதிலிருந்து தயாரிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அலங்காரப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கிராமப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். கடந்தாண்டை விட விலை ரூ.10 முதல் 40 வரை உயர்ந்துள்ளது', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ