மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் ரூ.2.29 கோடி வர்த்தகம்
04-Feb-2025
தேனி : வரத்து அதிகரித்ததால் பட்டர், சோயா பீன்ஸ்கள், பட்டாணி விலை குறைந்து விற்பனையானது.கொடைக்கானல் மலைபகுதியில் விளையும் பட்டர் பீன்ஸ், சோயாபீன்ஸ் பச்சை பட்டாணி மார்க்கெட்டுகளில் குறைந்தது கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படும். முகூர்த்த நாட்களில் கிலோ ரூ.200, அதற்கு மேல் விற்பனையாகும். இதனால் பலர் வீடுகளில் இவற்றை அரிதாக வாங்கி சமைப்பார்கள். இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் பட்டர், சோயா கிலோ ரூ. 80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. பட்டாணி கிலோ ரூ.50க்கு விற்பனையானது.உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் வருஷநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பட்டர்,சோயா வரத்து உள்ளது. இது தவிர கொடைக்கானல், பெங்களூரு, ஓசூரு பகுதிகளில் இருந்தும் பட்டர், சோயா, பட்டாணி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் விலை பாதியாக குறைந்துள்ளது என்றனர்.
04-Feb-2025