உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணி துவக்கம்

ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணி துவக்கம்

தேனி: உத்திரப்பிரதேசம், அயோத்தியில் ஜன.22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணி தேனியில் நேற்று துவங்கியது.தேனி அல்லிநகரம் ஆஞ்சநேயர்கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிற்குப்பின் பொதுமக்களுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ், அட்சதை பிரசாதம் உள்ளிட்டவை வழங்கும் பணி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் சார்பில் துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் மோகன் விழாவிற்கு தலைமை வகித்தார். வேதபுரீ சுவாமி சித்பவானந்தா ஆசிரமம் பூர்ணானந்த சுவாமிகள் துவக்கிவைத்தார். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன்,நிர்வாகிகள் மணிகண்டன், பாலபிரவீன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், நிர்வாகி செந்தில்குமார், பா.ஜ., நிர்வாகிகள் பாண்டியராஜன், பெரியசாமி, அஜித் இளங்கோ, விஜயகுமார், ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அழைப்பிதழ் வழங்கும் பணியை மகேந்திரன், சிவக்குமார், உதயகுமார் ஒருங்கிணைத்தனர்.கம்பத்தில் அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் உதயகுமார் துவக்கிவைத்தார். ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் உறுப்பினர்கள் மதி, விஸ்வா, கோபிநாத் பாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்வில் உடனிருந்தனர். நிர்வாகிகள் கூறுகையில், ஜன.,15க்குள் மாவட்டத்தில் 2.5 லட்சம் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ