உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டோர கடைகள் அகற்றுவதை நிறுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ரோட்டோர கடைகள் அகற்றுவதை நிறுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

மூணாறு: மூணாறில் ரோட்டோர கடைகளை அகற்றும் பணியை நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுமூணாறில் ரோட்டோர கடைகளை அகற்ற வேண்டும் என தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா தலைமையில் செப்.9ல் நடந்த போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அக்.25 முதல் ஊராட்சி, பொதுப்பணிதுறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் ரோட்டோர கடைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. கடைகளை அகற்ற அனைத்து கட்சியினர் ஒப்புதல் அளித்த நிலையில், பின்னர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் எம்.எல்.ஏ. ராஜா தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் ரோட்டோர கடைகள் அகற்றும் பணியை நிறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தவிர மாற்றுதிறனாளிகள் உள்பட பல்வேறு வகைகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் வியாபாரம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும். பல பகுதிகளில் வர்த்தகம் செய்வோரில் தகுதியானவர்களை ஊராட்சி கண்டறிந்து மறுவாழ்வு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள் அகற்றப்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று தகுதி வாய்ந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நகரில் மெயின் பஜார், காய்கறி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் பொருட்கள் வைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ