உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூட்டப்பட்ட திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்

பூட்டப்பட்ட திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்தல்

கம்பம் : காமயகவுண்டன்பட்டியில் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட திருமண மண்டபம் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமண மண்டபம் கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் இன்று வரை பூட்டி வைத்துள்ளனர். சமையலறை, சாப்பிடும் அறை இல்லை என ஆரம்பத்தில் கூறினர். அதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. பின் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. சமூக விரோதிகள் இருப்பிடமாகவும், திறந்தவெளி கழிப்பறையாகவும் மண்டபத்தின் முன்பகுதி உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தை திறந்தால், பேரூராட்சிக்கு நல்ல வருவாய் கிடைக்கும். பேரூராட்சியின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.எனவே பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்