உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆர்.டி.இ.,ல் மாணவர்களை அக்.17க்குள் சேர்க்க அறிவுறுத்தல் செலுத்திய கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு

ஆர்.டி.இ.,ல் மாணவர்களை அக்.17க்குள் சேர்க்க அறிவுறுத்தல் செலுத்திய கட்டணத்தை திருப்பி வழங்க உத்தரவு

தேனி: மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கட்டாய கல்வி உரிமைசட்டத்தில் கல்வி பெற தகுதியான மாணவர்களை அக்.,17க்குள் தேர்வு செய்யவும், தேர்வான மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாய உரிமை கல்வி உரிமைசட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் தனியார் பள்ளி டி.இ.ஓ., சண்முகவேல் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன், ஆர்.டி.இ., ஒருங்கிணைப்பாளர் கரியன், தனி அலுவலர் ஜெகன், தனியார் பள்ளி முதல்வர்கள், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டாய கல்வி உரிமைசட்டத்தில் ஏப்.,ல், மே யில் நடக்க வேண்டிய மாணவர்கள் சேர்க்கை தற்போது துவங்கியது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கல்வித்துறையினர் கூறியதாவது: ஆர்.டி.இ., திட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை அக்., 17க்குள் முடிக்க வேண்டும். தேர்வான எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் பத்து நாட்களுக்குள் தகுதியான மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும். வாய்ப்பு மறக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினர் குழந்தைகள் இந்த 25 சதவீத இட ஒதுக்கிட்டில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும். தேர்வான மாணவர்கள் பட்டியலை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளியில் தகுதியான மாணவர்கள் அதிகம் இருந்தால் பள்ளி வளாகத்தில் பெற்றோர், சி.இ.ஓ., முன்னிலையில் குலுக்கல் நடத்தி தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !