உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்வதேச தடயவியல் அறிவியல் கருத்தரங்கு

சர்வதேச தடயவியல் அறிவியல் கருத்தரங்கு

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் சர்வதேச தடயவியல், சுற்றுச்சூழல் அறிவியல் என்ற தலைப்பில் வேதியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். வேதியல் துறைத்தலைவர் தேவி மீனாட்சி வரவேற்றார். உறவின்முறை துணைத்தலைர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா, சரண்யா பேசினர். கருத்தரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளடக்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.மலேசியா மேலாண்மை, அறிவியல் பல்கலை பேராசிரியர் நடராஜமூர்த்தி கண்காட்சியை துவக்கி வைத்தார். சென்னை அண்ணா பல்கலை வேதியியல் துறை இணைப்பேராசிரியர் நாகராஜ், அன்னை தெரசா மகளிர் பல்கலை உதவி பேராசிரியர் ஹேமாமாலினி, மத்திய ஆப்பிரிக்கா புனித ஜான்பாப்ன்டிஸ்ட் பல்கலை விரிவுரையாளர் காமேஸ்பாண்டியன், திண்டுக்கல் புனித அந்தோணியர் மகளிர் கலைக் கல்லுாரி பேராசிரியர் மரிய பிரவீணா ஆகியோர் பேசினர். வேதியல் துறை ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை