உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு

சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கழகம் சார்பில், சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி குழுமத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் அருள்குமார் வரவேற்றார். அண்ணா பல்கலை மண்டல வளாகம் மதுரையில் பணியாற்றும் இ.சி.இ., துறைத் தலைவர் அருண் சிறப்புரை ஆற்றினார். தமிழகம் உள்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரிகளில் இருந்து இயந்திரவியல், கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்புத்துறை எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் மொத்தம் 1122 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 292 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வாகி உள்ளதாக கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் முனைவர் பவுன்ராஜ் செய்திருந்தார். முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறை தலைவர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார். கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை