உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தனியார் நிதி நிறுவனம் மூடல் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தனியார் நிதி நிறுவனம் மூடல் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

மூணாறு: தனியார் நிதி நிறுவனம் மூடப்பட்டதால், அதில் முதலீடு செய்த ஏராளமானோர் பணத்தை இழந்தனர். மூணாறில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் உள்ள கட்டடத்தில் கொச்சியை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் கிளை நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு 12 சதவீதம் வட்டி கொடுப்பதாக கூறியதால் ஏராளமானோர் பெரும் தொகைகளை முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் முறையாக வட்டி தொகை உட்பட முதலீடுகளை கொடுத்து வந்ததால், அதனை நம்பி முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பேக்கட்டிங் சென்டர் காலனியைச் சேர்ந்தவர் பவுன்தாய் 64. இவர் முதலீடு செய்த ரூ.50 ஆயிரத்தை பெற சென்றபோது நிறுவனம் பூட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து விசாரித்தபோது நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பூட்டப்பட்டதாக தெரியவந்தது. மூணாறு போலீசில் பவுன்தாய் புகார் அளித்தார். இந்நிறுவனம் கேரளாவில் பல பகுதிகளில் நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் மூணாறில் மட்டும் ரூ. ஒரு கோடிக்கு மேல் மோசடி நடந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி