சின்னமனுார் உழவர் சந்தையில் விலை நிர்ணயத்தில் குளறுபடி
சின்னமனூர் : சின்னமனுார் உழவர் சந்தையில் காய்கறி விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.மாவட்டத்தில் தேனி மற்றும் கம்பம் உழவர் சந்தைகள் மட்டுமே பெரிய அளவில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. சின்னமனூர் , பெரியகுளம், போடி, தேவாரம் உழவர் சந்தைகள் பெயருக்கு செயல்பட்டுவருகின்றன.உழவர் சந்தைகளின் காய்கறிகள் விலையை சம்பந்தப்பட்ட உழவர் சந்தை அதிகாரிகள் அதிகாலையில் நிர்ணயம் செய்ய வேண்டும். மொத்த மார்க்கெட்டில் விலையை கேட்டு, அந்த விலையிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும்.இதில் சின்னமனூர் உழவர் சந்தையில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. உதாரணத்திற்கு கம்பம், தேனி உழவர் சந்தைகள் ஊட்டி காரட் கிலோ ரூ.46 என்று நிர்ணயம் செய்துள்ளனர்.