உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பாலியல் பலாத்காரம் லுக் அவுட் நோட்டீஸ் வெளியீடு

சிறுமி பாலியல் பலாத்காரம் லுக் அவுட் நோட்டீஸ் வெளியீடு

மூணாறு: மூணாறு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சலே 35, என்பவருக்கு எதிராக போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' வெளியிட்டனர்.கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சிட்டி வாரை எஸ்டேட் ஓ.சி. டிவிஷனில் தொழிலாளியான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சலே டிச.31 மாலை 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர், அப்பகுதியில் காட்டினுள் மாயமானார். மூணாறு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக டிரோன், போலீஸ் மோப்ப நாய் ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தியும் எவ்வித தகவலும் தெரியவில்லை. சலே சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டதுடன் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை