உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஜாக்டோ ஜியோ ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்: அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு

 ஜாக்டோ ஜியோ ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்: அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு

தேனி: ஜாக்டோ ஜியோ சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனல் அரசு அலுவகங்களில் பணிகளும், பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தால் தாலுகா, ஊராட்சி ஒன்றிய,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கலெக்டர் அலுவலகத்தில் சில பிரிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் அன்பழகன், கிருஷ்ணசாமி, மோகன், பெரியசாமி, சரஸ்வதி, சுல்தான், ரவிக்குமார், முத்துக்குமார்,பொட்டியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளுக்கும் 17,910 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 13,293 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் வருவாய்த்துறையில் 161 பேர், ஊரக வளர்ச்சித்துறையில் 244 பேர் , கல்வித்துறையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லா பணியாளர்கள் மொத்தம் 1391 பேர், நில அளவைத்துறையில் 46 பேர், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 29 பேர், வணிக வரித்துறையில் 13 பேர், மாநில நெடுஞ்சாலைத்துறையில் 15 பேர் என மொத்தம் 1910 பேர் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் சான்றிதழ் வழங்குதல், அலுவல் பணிகள், பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்