உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜல்ஜீவன் பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் தவிப்பு

ஜல்ஜீவன் பங்களிப்பு தொகை வசூலிக்க முடியாமல் தவிப்பு

ஆண்டிபட்டி: ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் புதிய பைப் லைன், புதிய மேல்நிலைத் தொட்டிகள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் திட்டத்தில் செலவழிக்கப்படும் தொகையில் 10 சதவீத தொகையை பொதுமக்களின் பங்களிப்பாக வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊராட்சிகளில் ஒவ்வொரு இணைப்புக்கும் பங்களிப்புத் தொகையாக ரூ.2000 முதல் 3000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடுகளுக்கான குழாய் இணைப்பு பெற வைப்புத் தொகை ரூ.1000, மாதாந்திர கட்டணமாக ரூ.60 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் நிர்ணயித்த தொகையை வசூலிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சிகள் பலவும் விவசாயம், கூலி வேலையை சார்ந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டம் குறித்து பொதுமக்களிடம் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நிர்ணயம் செய்த தொகையை வசூல் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும் பங்களிப்பு தொகை ரூபாய் பல லட்சம் நிலுவையாகவே உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ