உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜன.1065 மி.மீ., மழை பதிவு

ஜன.1065 மி.மீ., மழை பதிவு

தேனி : தேனி மாவட்டத்தில் 13 இடங்களில் மழை மானிகள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின மூலம் மாவட்டத்தில் மழைப்பொழிவு கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 10 நாட்களில் 1065.6 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 81.93 மி.மீ., பதிவாகி உள்ளது. அதிக பட்சமாக ஜன.,5ல் 283.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஜனவரியில் சராசரி மழை அளவு 29.8 மி.மீ., ஆகும். இதனை ஒப்பிடுகையில் கடந்த மாதம் கூடுதல் மழை பெய்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் ஜனவரியில் பதிவாகி உள்ள இரண்டாவது அதிகபட்ச மழை அளவு ஆகும். 2020ல் 23.9 மி.மீ., 2021ல் 1401.5 மி.மீ., 2022ல் 308.9 மி.மீ., 2023ல் 53 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை