உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.2500

வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.2500

தேனி: தேனியில் வரத்து குறைவால் மல்லிகை பூ கிலோ ரூ. 2500க்கு விற்பனையானது.தேனி பூ மார்க்கெட்டிற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.தை மாதம் துவங்கியது முதல் சுப முகூர்த்தம், விழாகளால் பூக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மல்லிகை ரூ.2500, ஜாதிப்பூ ரூ.1500, கனகாம்பரம் ரூ.ஆயிரம், காக்கரட்டான் ரூ. 800 முதல் ரூ.ஆயிரம் வரை, சம்பங்கி ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150, பட்டன்ரோஸ் ரூ.250, செவ்வந்தி ரூ.100 முதல் ரூ.150 வரை, கோழிக்கொண்டை ரூ.70, செண்டுமல்லி ரூ.30 க்கு விற்பனையானது.வியாபாரி குமார் கூறுகையில், மாவட்டத்தில் பனிதாக்கம் அதிகம் உள்ளதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மார்க்கெட்டிற்கு தினமும் 150கிலோ மல்லிகை வந்த நிலையில் சில நாட்களாக 10 கிலோ கூட வரத்து இல்லை.இதனால் விலை உயர்ந்துள்ளது.வரும் நாட்களில் முகூர்த்த தினங்கள் வருவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை