உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜார்க்கண்ட் தொழிலாளி கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜார்க்கண்ட் தொழிலாளி கைது

மூணாறு: மூணாறு அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரை ஐந்து நாட்களுக்கு பிறகு தமிழக பகுதியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சிட்டிவாரை எஸ்டேட் என்.சி. டிவிஷனில் ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா தானாமுக் பகுதியைச் சேர்ந்த சேலேகந்துர் 27, அவரது மனைவி சுமாரிபுர்ஜோ ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்தனர். இந்நிலையில் சேலேகந்தர் டிச.31 மாலை 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அன்று இரவு முதல் அவர் மனைவியுடன் தலைமறைவானார்.மூணாறு டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் சிட்டிவாரை, லாக்காடு எஸ்டேட் பகுதிகளில் டிரோன், மோப்ப நாய் ஆகியவற்றுடன் தேடியபோதும் சேலேகந்துர் சிக்காமல் போக்கு காட்டினார். அவர் சொந்த ஊர் தப்பிக் செல்வதை தடுக்கும் வகையில் இரு தினங்களுக்கு முன்பு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டதுடன் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.இந்நிலையில் போடி மெட்டு அருகே சுண்டல் பகுதியில் நேற்று அதிகாலை தேனிக்குச் சென்ற பஸ்சில் இருவரும் ஏறினர். போடிமெட்டில் கேரள கலால் துறை சோதனைசாவடியில் அதிகாரிகள் சோதனையிட பஸ்சில் ஏறினர். அதனை கண்ட சேலேகந்துர் பஸ்சில் இருந்து இறங்கி போடிமெட்டை கடந்து தமிழக பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார்.கலால்துறையினர் சேலேகந்துரின் மனைவியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அதன்பிறகு அந்த வழியில் தேனியை நோக்கிச் சென்ற பஸ்சில் போலீசார் சென்றபோது புலியூத்து அருகே பஸ்சில் ஏறிய சேலேகந்துரை மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்து மூணாறுக்கு அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி