மேலும் செய்திகள்
தே.மு.தி.க., அணி நிர்வாகிகள் நியமனம்
18-Nov-2024
உத்தமபாளையம் : 'நீங்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் ஹிந்து என்ற உணர்வுடன் ஹிந்து முன்னையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்' என ஹிந்து முன்னணி மாநில செயலர் காடேஸ்வரா சுப்ரமணியன் பேசினார்சின்னமனூரில் கொடியேற்று விழா, ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது :ஒரு ஊரில் விலாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆட்டோக்காரரிடம் செல்வோம். ஊருக்கு வரும் நல்லவன், கெட்டவன், தீவிரவாதி என அனைவரும் இரவு நேரத்தில் வந்து இறங்கினால் போக வேண்டிய விலாசத்திற்கு ஆட்டோவில் தான் செல்வார்கள். எனவே, நீங்கள் முக்கியமானவர்கள் நம்மிடம் ஒற்றமை வேண்டும். பிற மதத்தினரிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை. தி.மு.க. காங்.. கம்யூ. அ.தி.மு.க என பல அரசியல் கட்சிகளில் உள்ளீர்கள் . ஆனால் ஹிந்து என்ற உணர்வுடன் ஹிந்து முன்ணையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் சுந்தர், பொதுச் செயலாளர் பாலமுருகன், ஆட்டோ முன்னணி மாநில துணை தலைவர் ஆச்சி கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
18-Nov-2024