உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் முகூர்த்தகால் நடல்

கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் முகூர்த்தகால் நடல்

பெரியகுளம்: கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலைமேல் கைலாசநாதர் கோயில் உள்ளது. கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரர் மற்றும் விநாயகர், பாலசுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி பூஜைகள், கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கும்பாபிஷேகம்: கைலாசநாதர் கோயில் திருப்பணிகள் நடக்கிறது. ஆக., 29 ல் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முகூர்ந்தக்கால் நடும் விழா முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. அர்ச்சகர் ராஜா பட்டர் தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர். செயல் அலுவலர் சுந்தரி, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ்,முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் ஆன்மிக பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை