உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா (ஏப்.16ல்) கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் மண்டகப்படி நடக்க உள்ளது.புராதானமும், சிறப்பும் கொண்டது கம்பம் கவுமாரியம்மன் கோயில். தேனி மாவட்டத்தில் சுயம்புவாக அம்மன் எழுந்தருளிய கோயில்களில் இது பிரதானமானது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலிற்கு அடுத்து அதிக பக்தர்கள் வரும் கோயிலாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 21 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை (ஏப்.16ல்) நடக்கிறது. முன்னதாக காலை கம்ப ராயப்பெருமாள் கோயிலில் இருந்த உற்ஸவர், ஊர்வலமாக அழைத்து வரப்படுவார். பின்னர் மாலை 4:00 மணியளவில் முக்கொம்பு, கரகம் ஊர்வலமாக நகர் வீதிகளில் கொண்டு வரப்பட்டு, கோயிலில் உள்ள கம்பத்தில் இணைத்து கட்டப்படும். முக்கொம்பிற்கு புது வஸ்திரம் உடுத்தி, மஞ்சள் நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து நாள்தோறும் ஒரு சமூகத்தின் சார்பில் மண்டகப்படி நடத்துவர். தினமும் அம்மன் விதவித அலங்காரத்துடன் வீதி உலா வருவார். 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முத்தாய்ப்பாக ஏப்.29, 30ல் அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு, ஆயிரம் கண் பானை போன்ற நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடைபெறும். கம்பம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய அக்னிசட்டி எடுத்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவர். பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறும். அன்று இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை