உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரள அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்

கேரள அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்

சபரிமலை: பம்பையில் இருந்து நிலக்கல் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ், அட்டத்தோடு அருகே தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.பம்பையில் இருந்து நேற்று அதிகாலை நிலக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த கேரள அரசு தாழ்தள பஸ், அட்டத்தோடு அருகே சென்று கொண்டிருந்தபோது இன்ஜினில் இருந்து புகை வரத் துவங்கியது. பஸ்சில் பயணியர் இல்லை. டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு தீயணைப்பானால், தீயை அணைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.டிரைவர், கண்டக்டர் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர். பம்பையிலிருந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்த போது, பஸ் முழுதும் எரிந்து நாசமானது. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை