உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாரான தமிழர்கள் ஆறு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாரான தமிழர்கள் ஆறு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு

மூணாறு : கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் இன்று பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தயாராக உள்ளனர்.கேரளாவில் இடுக்கி, பாலக்காடு, வயநாடு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய ஆறு மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் பொங்கலை சிறப்புடன் கொண்டாடும் வகையில் ஆறு மாவட்டங்களுக்கு இன்று அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.இடுக்கி மாவட்டம் மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் பல தலைமுறைகளாக வசிக்கும் தொழிலாளர்களான தமிழர்கள் பொங்கல், தீபாவளி உள்பட தமிழகத்தில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று பொங்கலை கொண்டாட தயாராக உள்ளனர். அதற்கு தேவையான பொங்கல் பொருட்கள், கரும்பு, கூரைப் பூக்கள் (காப்புகட்டு) ஆகியவற்றை நேற்று வாங்கிச் சென்றதால் விற்பனை களை கட்டியது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை என்பதால் கரும்பு, கூரைப் பூக்கள் ஆகியவற்றின் வரத்து குறைந்தது. அதனால் ஒரு கரும்பு ரூ.60 க்கும், கூரை பூக்கள் ஒரு கட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை