உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுார் முத்தாலம்மன் கோயில் திருவிழா

கூடலுார் முத்தாலம்மன் கோயில் திருவிழா

கூடலுார்; கூடலுார் தம்மனம்பட்டி மேற்கு முத்தாலம்மன் திருவிழா கோலாகலமாக நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து எல்.எப்., ரோடு, மெயின் பஜார், நடுத்தெரு, பெட்ரோல் பங்க் தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்து வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி