கம்பராயப் பெருமாள் கோயிலில் கும்பாபிேஷக ஆலோசனை
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி வேலை முடியும் நிலையில் இருப்பதால், கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கம்பராயப் பெருமாள் கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. நகரின் மையப்பகுதியில் 10 ஏக்கரில் கோயில் அமைந்துள்ளது. ஒரே வளாகத்தில் சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் உள்ள தலமாகும். இந்த கோயில் திருப்பணி ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது . கோபுரத்தில் உள்ள பொம்மைகள் சீரமைத்தல், பெயிண்டிங், உள் தளம் மற்றும் வெளிப்பிரசார தளம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. திருப்பணிகள் நிறைவு பெறுவதால் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல். ஏ. இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். சமுதாய தலைவர்கள், கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகம் நடத்துவதற்குரிய செலவிற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோயில் முன்பக்க ஆர்ச் பழுதடைந்திருந்ததை இடித்து விட்டு புதிதாக கட்ட பூமி பூஜையும், கோயில் வளாகத்தில் நூலகம் கட்ட நிலம் அளவீடு செய்யும் பணியும் நடைபெற்றது.