உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  எஸ்.ஐ.ஆர்., பணியில் தொய்வு; : கலெக்டர் கண்டிப்பு

 எஸ்.ஐ.ஆர்., பணியில் தொய்வு; : கலெக்டர் கண்டிப்பு

கூடலுார்: கூடலுாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக நகராட்சிக்கு வந்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அலுவலர்களை கண்டித்தார். கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 38 ஆயிரத்து 263 வாக்காளர்கள் உள்ளனர். அனைவருக்கும் எஸ்.ஐ.ஆர். விண்ணப்ப படிவம் வழங்கும் பணி முடிவடைந்தது. ஆனால் பூர்த்தி செய்த படிவங்களை பெறுவதிலும், அதனை எஸ்.ஐ.ஆர். செயலியில் பதிவேற்றம் செய்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் பணியாளர்கள் எஸ்.ஐ.ஆர். செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது கலெக்டர் ரஞ்ஜீத்சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10 சதவீதம் கூட பணிகள் முடிவடையாத நிலையில் அலுவலர்களை கண்டித்தார். அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்களிடம் நேரில் சென்று விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து உடனடியாக அதைப் பெற்று பதிவேற்றம் செய்வதற்கான பணியில் கவுன்சிலர்களும் பணியாளர்களும் முழுமையாக ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி