மேலும் செய்திகள்
சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்கலையில் உண்ணாவிரதம்
29-Jan-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு அரசு மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இக் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 28 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 11 பேருக்கு மதுரை காமராஜ் பல்கலை மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சம்பளத்தை அனைத்து விரிவுரையாளர்களுக்கும் அரசு மூலம் வழங்க வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் ஜீனியாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
29-Jan-2025