உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜூலையில் மழை குறைவு

ஜூலையில் மழை குறைவு

தேனி : மாவட்டத்தில் ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், போடி ,வீரபாண்டி, கூடலுார், உத்தமபாளையம், பெரியகுளம், மஞ்சளாறு, வைகை அணை, சோத்துப்பாறை, பெரியாறு, தேக்கடி, சண்முகாநதி அணையில் மழை மானி வைத்து மாவட்டத்தில் பதிவாகும் மழை அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புதிதாக 26 இடங்களில் தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டாலும், அவை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மாவட்டத்தில் ஜூலை 2023ல் 946.5 மி.மீ., மழையும், 2024ல் 1380.2 மி.மீ., மழையும் பதிவாகி இருந்தது. இந்தாண்டு 824.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூலையில் மழை அளவு குறைந்தள்ளது. அதே நேரம் கடந்த 7 மாதங்களில் மாவட்டத்தில் 6268.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில் ஏப்., மே., மாதங்களில் கடந்த இரு ஆண்டுகளை விட மழை அதிகம் பெய் துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ