உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதிமீறிய 207 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து; போக்குவரத்து அலுவலர் தகவல்

விதிமீறிய 207 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து; போக்குவரத்து அலுவலர் தகவல்

தேனி; மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி விபத்துக்களை ஏற்படுத்திய வாகன டிரைவர்கள் 207 பேரின்லைசென்ஸ் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. விபத்துக்களை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையைஎடுக்க முடிவுசெய்துள்ளனர்.மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் நடந்த 21 விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலில் போக்குவரத்து மற்றும் ஸ்டேஷன் போலீசார் வீதிகளை மீறுபவர்கள் குறித்து தொடர் வாகன சோதனை மேற்கொண்டனர்.இதில் அலைபேசியில் பேசியவாறு வாகனங்களை இயக்குவது, மது அருந்தி வாகனங்களை இயக்குவது உட்பட 6 விதிமுறைகளை கண்காணித்து அதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இவர்களின் வழக்கு விபர பட்டியல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனை வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலு, ஆய்வாளர்கள் மணிவண்ணன், கேசவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது: வழக்கு ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்திய பின், விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்திய 21 பேர், அதீதவேகமாக வாகனங்களை இயக்கிய 12 பேர், கனரக வாகனங்களில் அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றிய 11 பேர், கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற 13 பேர், ஆபத்தை அறியாமல் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேசியபடிசென்ற. 83 பேர், மது குடித்து வாகனங்களை இயக்கிய 14 பேர், சிக்னல் சிவப்பு விளக்கை தாண்டிச் சென்ற 53 பேர் என மொத்தம் 207 பேர்விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் அவர்களின் உரிமம் அடுத்த 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆபத்தை அறியாமல் அலைபேசியில் பேசியபடியே வாகனங்களை இயக்குவது அதிகரித்துள்ளது.இதனால் அவர்களைஉரிமங்களை ரத்து செய்வதுடன், மேல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். மேலும் விழிப்புணர்வு தீவிரப்படுத்த உள்ளோம். வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ