உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள்

தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள்

தேனி:அவதுாறாக பேசிய கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த போடி நந்தவனத்தை சேர்ந்த இறைச்சி கடை பங்குதாரர் சிவமூர்த்திக்கு 30, ஆயுள்தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. போடி தேவர் காலனி பேச்சியம்மன் கோயில் தெரு ராஜேஷ்குமார் 45. இதே ஊரை சேர்ந்த சாந்தியை காதலித்து திருமணம் செய்தார். 2019ல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த சாந்தி பழனிசெட்டிபட்டி உள்ள தந்தை வீட்டில் தங்கி மில்வேலை செய்தார். ராஜேஷ்குமார் தாயார் வீட்டில் வசித்தார். அப்போது போடி எண்ணெய்க்கார முத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தஒருவருடன் ராஜேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் அவரின் மனைவிக்கும் ராஜேஷ்குமாருக்கும் தகாத உறவு உள்ளதாக சாந்தியும், ராஜேஷ்குமாரின் சித்தி கலாவதியின் மகன் சிவமூர்த்தியும் தவறாக பேசினர். இதனால் சிவமூர்த்திக்கும், ராஜேஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. முன்விரோதம் காரணமாக 2023 நவ.4ல் சுப்பிரமணியர் கோயில் வடக்கு தெரு வழியாக சென்ற ராஜேஷ்குமாரை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்து சிவமூர்த்தி தப்பினார். போடி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சிவமூர்த்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி