மேலும் செய்திகள்
மது பாட்டில்களை பதுக்கிய கூலி தொழிலாளி கைது
24-Sep-2024
தேனி: உத்தமபாளையம் நாராயணத்தேவன்பட்டி சி.எஸ்.ஐ., பள்ளித் தெரு கருப்பசாமி 48. லாரி உரிமையாளர்.இவர் தனது லாரியில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள ஹால்ஸ் மதுபான ஆலையில் மதுபாட்டில்களை ஏற்றி, டாஸ்மாக் குடோன்களில் இறக்குவது வழக்கம். செப்., 18புதுக்கோட்டையில் இருந்து மதுபான பெட்டிகளை ஏற்றிக் கொண்டு செப்., 19ல் தேனி கருவேல்நாயக்கன்பட்டி டாஸ்மாக் குடோனில் இறக்கும்போது, தார்பாய் கிழிக்கப்பட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 360 மதிப்புள்ள 1824 மதுபாட்டில்கள் அடங்கிய 38 பெட்டிகள் திருடு போனது தெரிந்தது. கருப்பசாமி இத்தகவலை ஆலை மேலாளரிடம் தெரிவித்தார். அவர் தேனியில் ஆய்வு செய்தார். கருப்பசாமி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Sep-2024