மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
27-Jan-2025
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார். சங்க நிர்வாகிகள் கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கவிஞர் விருமாண்டி கன்னீசுவரி தமிழ் இலக்கியங்கள், அதன் தொன்மை, இலக்கியங்களில் பெண்களின் பங்கு பற்றி பேசினார். கல்லுாரி செயலாளர் குணசேகரன், மணிமாறன் பங்கேற்றனர்.சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த இலக்கிய மன்ற விழாவிற்கு பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். கோம்பை கன்னிகா பரமேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியர் முத்தழகு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
27-Jan-2025