உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுகாதாரமற்ற ஓட்டலுக்கு பூட்டு

சுகாதாரமற்ற ஓட்டலுக்கு பூட்டு

மூணாறு:மூணாறில் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்ட ஓட்டலை சுகாதாரதுறை அதிகாரிகள் பூட்டினர்.பழைய மூணாறு பகுதியில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலை பாலம் அருகில் உள்ள ஓட்டலில் உணவு அருந்திய சுற்றுலா பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அந்த ஓட்டலில் தேவிகுளம் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சமையல் அறை, உணவு பொருட்களை பாதுகாக்கும் அறை ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டதால் ஓட்டலை பூட்டினர். இந்த ஓட்டலில் நட்சத்திர ஓட்டல் போன்று உணவு வகைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக சமீபத்தில் புகாரில் சிக்கியது.எனினும் தற்போது வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை