உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மகாசிவராத்திரி  ரதயாத்திரை

 மகாசிவராத்திரி  ரதயாத்திரை

தேனி: மகாசிவராத்திரி 2026 பிப்., 15ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோவை ஈஷா யோக மையம் சார்பில் மாவட்டந்தோறும் ஆதியோகி சிலையுடன் கூடிய வாகனம் மூலம் விழிப்புணர்வு ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. தேனி வேதபுரீயில் விழிப்புணர்வு ரத யாத்திரையை சித்பவாநந்த ஆசிரம நிர்வாக அறங்காவலர் சுவாமி ஸமாநந்தர் துவக்கி வைத்தார். ரதம் வீரபாண்டி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பஸ் ஸ்டாண்ட், வடபுதுப்பட்டி வழியாக பெரியகுளம் சென்றது. ரத யாத்திரையை ஒருங்கிணைப்பாளர் ராமர் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி