கொலை மிரட்டல் ஒருவர் கைது
போடி:போடி டி.வி.கே.கே., நகரில் வசிப்பவர் பாண்டியராஜ் 41. தனியார் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர் நேற்று வேனில் மாணவர்களை ராசிங்காபுரத்தில் இறக்கி விட்டு திரும்ப வந்துள்ளார். ராசிங்காபுரம் சிங்காரவேலன் தெருவை சேர்ந்த திவான் 22., ஹரி பிரசாத் இருவரும் பஸ்ஸ்டாப்பில் பள்ளி வேனை மறித்துள்ளனர். எதற்கு இந்த பக்கம் வேனை ஓட்டி வந்தாய் என கூறி, பாண்டியராஜை திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். பாண்டியராஜ் புகாரில் போடி தாலுாகா போலீசார் திவானை கைது செய்தனர். ஹரிபிரசாத்தை தேடி வருகின்றனர்.