அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் கைது
மூணாறு: அரசு நிலத்தை ஆக்கிரமித்து, குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டு பெட்டி கடை வைத்தவரை போலீசார் கைது செய்தனர். மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட், நெற்றிமேடு டிவிஷனை சேர்ந்தவர் விஜயகுமார் 40. இவர், தனது தாயாருடன் சேர்ந்து மாட்டுபட்டி அணை அருகே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வழியாக கடந்து சென்ற ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டு பெட்டிக்கடை வைத்தார். தேவிகுளம் ஊராட்சி செயலர் போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.