தாசில்தாரை மிரட்டியவர் கைது
தேனி: உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன். இவர் எரசக்கநாயக்கனுார் கிராமத்தில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அங்கு அனுமதி கடிதம், விசாரணை கடிதமின்றி கன்னிசேர்வைபட்டி சிவக்குமார் அலுவலகத்திற்குள் நுழைந்தார். விசாரணையில் ஈடுபட்டிருந்த தாசில்தாரை அசிங்கமாக திட்டினார். உடனிருந்த ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் தடுத்தனர். அப்போது தாசில்தாரை என்ன செய்கிறேன் பார் என சிவக்குமார் மிரட்டி சென்றார். தாசில்தார் கண்ணன் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.