உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

 பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

போடி: போடி புதுார் ரயில்வே காலனி முருகேஸ்வரி 33. இவரது கணவர் 11 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந் தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் 38. முருகேஸ்வரியின் வீட்டுக் கதவை தட்டி உள்ளார். கதவை திறந்து பார்த்தப் போது அருண்பாண்டியன், முருகேஸ்வரியின் கையை பிடித்து இழுத்தார். அதிர்ச்சியில், பாதுகாப்பிற்காக அருண் பாண்டியனின் கையை கடித்து முருகேஸ்வரி சத்தம் போட்டார். 'சத்தமிட்டால் உன்னையும், குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன்.' என, மிரட்டினார். சத்தம் கேட்டு, அருகே வசித்தவர்கள் எழுந்து பார்த்த போது அருண்பாண்டியன் தப்பி ஓடி விட்டார். முருகேஸ்வரி புகாரில் போடி டவுன் போலீசார் அருண்பாண்டியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை