உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிள்ளைகளை பார்க்க வந்தவர் கைது

பிள்ளைகளை பார்க்க வந்தவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் சண்முகபிரியா 30. இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயமுருகனுக்கும் 38. கடந்த 2014 ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள், மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கில், கடந்த மார்ச் 25ல் விவகாரத்தானது. இந்நிலையில் தனது பிள்ளைகளை பார்க்க வந்த ஜெயமுருகன், சண்முகபிரியாவிடம் பிரச்னை செய்து அவரை அவதூறாக பேசியுள்ளார். சண்முகபிரியா புகாரில் ஜெயமுருகனை தென்கரை போலீசார் கைது செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை