உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேகத்தடையில் விழுந்தவர் பலி

வேகத்தடையில் விழுந்தவர் பலி

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி செல்ல கருப்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் 43. தேவதானப்பட்டியில் உறவினர் காதணி விழாவிற்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். தேவதானப்பட்டி இருளப்பன் வீடு முன்பு வேகத்தடையில் எதிர்பாராத விதமாக டூவீலர் ஏறி, இறங்கும்போது நிலை தடுமாறி, பாலச்சந்திரன் விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ