உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மஞ்சு விரட்டு மாடு முட்டி காயமடைந்தவர் பலி

மஞ்சு விரட்டு மாடு முட்டி காயமடைந்தவர் பலி

மூணாறு : மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் நடந்த மஞ்சு விரட்டின்போது மாடு முட்டி பலத்த காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த ஊராட்சியில் வட்டவடை, கோவிலூர், கொட்டாக்கொம்பூர் ஆகிய கிராமங்கள் சார்பில் தமிழர் மரபுபடி ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. அதன்படி பிப். ஒன்றில் கோவிலூரில் மஞ்சு விரட்டு நடந்தது. அப்போது சீறி பாய்ந்து வந்த மாடு முட்டி கோவிலூரைச் சேர்ந்த முருகன் 60, கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை கோலஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை