உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மண்டல பூஜை நிறைவு

 மண்டல பூஜை நிறைவு

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பாலசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை 1 ம் தேதி மண்டல பூஜை துவங்கியது. தினமும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், பாலபிஷேகம் பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. அலங்கார பிரியனான ஐயப்பன் பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்தார். தினமும் பல்வேறு ஊர்களிலிருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவில் கோயில் வளாகத்தில் தங்கி செல்வர். கார்த்திகை 1 முதல் நேற்று மார்கழி 12 வரை, 41 நாட்கள் மண்டல பூஜை நிறைவு பெற்றது. இந்த காலகட்டங்களில் இங்கிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்தும், இரு முடி கட்டி ஐயப்பனை வழிபட்டுச் சென்றனர். பூஜைகளை அர்ச்சகர் பிரசன்ன வெங்கடேசன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை